Menu

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னையில் உள்ள 5 சாலைகள் நவீன வசதிகளுடன் சீரமைப்பு

சென்னையில் உள்ள 5 சாலைகள் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.32 கோடி திட்டத்திற்கு ஸ்மார்ட் சிட்டி குழு அனுமதி வழங்கியுள்ளது.

 

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தி.நகரில் நடைபாதை வளாகம், 24 மணி நேர குடிநீர் வசதி, ஆகாய நடைபாதை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இதைத்தவிர்த்து 600 கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்கும் பணி, சைக்கிள் ஷேரிங் திட்டம், ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம், போக்குவரத்து பூங்கா உள்ளிட்ட திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதைத்தவிர்த்து பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி குழு கூட்டத்தில் சென்னையில் உள்ள சாலைகளை நவீன வசதிகளுடன் சீரமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிவடைந்தவுடன் இரண்டாவது கட்டமாக வடக்கு உஸ்மான் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

 

இந்த திட்டத்தில் ஜி.என்.செட்டி சாலை, வெங்கட்நாராயணா சாலை உள்ளிட்ட சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. சாலை அனைத்தும் நவீன முறையில் சீரமைக்கப்பட உள்ளது.

 

இந்த சாலைகளில் நடைபாதைகள் அமைத்தல், அழகுபடுத்துதல். சாலையோர பூங்கா அமைத்தல், பார்க்கிங் வசதி ஏற்படுத்துதல், சிசிடிவி கேமரா அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன.

 

குறிப்பாக இந்த சாலைகளின் ஓரத்தில் வெளி நாடுகளில் உள்ளதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

 

Facebook Comments

ஜூலை 28ம்தேதி மதுரையை கலகலக்க வைக்கப் போறார் எஸ்.வி.சேகர்

மதுரையில் வருகிற 28ம்தேதி (ஞாயிற்றுக்...

Leave a Reply