Menu

வாக்குப் பதிவு எந்திரம் செயல்படும் விதம் குறித்து கலந்தாய்வு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய வாக்குப் பதிவு எந்திரம் செயல்படும் விதம் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அந்த எந்திரத்தைக் கொண்டு மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தின் செயல் விளக்க நிகழ்ச்சியை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சுந்தரவனம் பள்ளியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி அந்த இயந்திரம் செயல்படுவது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Facebook Comments

Leave a Reply